அவன்...
விழிகளை கருவறையிலேயே
தொலைத்திருக்க வேண்டும்...
கைத்தடியும் அவனைக்
கைவிட்டது போலும்...
விரையும் மனிதர்களின்
ஊர்தி நெரிசலுக்கிடையே
அக்கரை சேர்த்திட ஒரு
அக்கறை கை தேடினான்...
படரக் கொம்பில்லாமல்
காற்றில் தவிக்கும்
கொடியைப்போல
அலைந்த கரங்களுக்கு
ஆதரவுக்கரம் நீட்டி
தெருவின் மறுகரையில்
சேர்த்தபோது கவனித்தேன்...
தொலைந்திருந்த அவன்
விழிகளில்
என் முகம் அழகாய்த்
தெரிந்தது.
நன்றி: தமிழ் ஓசை(களஞ்சியம்)
13-04-2008
விழிகளை கருவறையிலேயே
தொலைத்திருக்க வேண்டும்...
கைத்தடியும் அவனைக்
கைவிட்டது போலும்...
விரையும் மனிதர்களின்
ஊர்தி நெரிசலுக்கிடையே
அக்கரை சேர்த்திட ஒரு
அக்கறை கை தேடினான்...
படரக் கொம்பில்லாமல்
காற்றில் தவிக்கும்
கொடியைப்போல
அலைந்த கரங்களுக்கு
ஆதரவுக்கரம் நீட்டி
தெருவின் மறுகரையில்
சேர்த்தபோது கவனித்தேன்...
தொலைந்திருந்த அவன்
விழிகளில்
என் முகம் அழகாய்த்
தெரிந்தது.
நன்றி: தமிழ் ஓசை(களஞ்சியம்)
13-04-2008
0 நீட்சி(கள்):
Post a Comment