
திடுக்கென்று ஒருமுறை
உடலை உதறிக்காட்ட
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது
அம்மாவின் இடுப்புக் குழந்தை.
உடலை உதறிக்காட்ட
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது
அம்மாவின் இடுப்புக் குழந்தை.
அக்காவும் சளைக்காமல்
உடல் உதற
குழந்தையும் சலிக்காமல்
சிரித்துக் கொண்டேயிருந்தது.
என்னோடு இரண்டு வருடங்களுக்கும் மேலாய்
பேசாதிருக்கும் எனது அக்காவும்
அந்நாளில் இதுபோல்
எனக்குச் செய்திருக்கக் கூடும் .
குறிப்பு. ஏற்கனவே எழுதிவிட்டிருந்த ஒன்றுதான் இது என்றாலும், இக்கவிதை குறித்து எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால், மிக நல்லக் கவிதைகளை எழுதிவரும் மதன்அவர்களின் வலைப்பூவில் இதுமாதிரியான ஒரு கவிதை படிக்க முடிந்ததால், நானும் நம்பிக்கையோடும், கொஞ்சம் தெம்போடும் இதை என் வலையில் எழுதுகிறேன்
உடல் உதற
குழந்தையும் சலிக்காமல்
சிரித்துக் கொண்டேயிருந்தது.
என்னோடு இரண்டு வருடங்களுக்கும் மேலாய்
பேசாதிருக்கும் எனது அக்காவும்
அந்நாளில் இதுபோல்
எனக்குச் செய்திருக்கக் கூடும் .
குறிப்பு. ஏற்கனவே எழுதிவிட்டிருந்த ஒன்றுதான் இது என்றாலும், இக்கவிதை குறித்து எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால், மிக நல்லக் கவிதைகளை எழுதிவரும் மதன்அவர்களின் வலைப்பூவில் இதுமாதிரியான ஒரு கவிதை படிக்க முடிந்ததால், நானும் நம்பிக்கையோடும், கொஞ்சம் தெம்போடும் இதை என் வலையில் எழுதுகிறேன்
11 நீட்சி(கள்):
தயக்கம் வேண்டியதில்லை.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
//அந்நாளில் இதுபோல்
எனக்குச் செய்திருக்கக் கூடும் //
ஒவ்வொரு சம்பவமு இதற்குமுன் நடந்த ஏதோவென்றை நினைவுடுத்தவே செய்யும்.
எதற்கிந்தத் தயக்கம். உயிர் எழுத்தில் உங்கள் கவிதை வந்ததற்கு வாழ்த்துக்கள்.
@மாதவராஜ்..
முதல் வருகை(சரியா.?). ஊக்கத்திற்கு நன்றி.
@வடகரைவேலன்..
/ஒவ்வொரு சம்பவமும் இதற்குமுன் நடந்த ஏதோவென்றை நினைவுடுத்தவே செய்யும். /
ஆமாம் அண்ணாச்சி. நான் இக்கவிதையில் குறிப்பிடுவது,”பெரியவர்களாகும்போது குழந்தைமையை தொலைத்து ,பகை வளர்த்துக்கொண்டுவிடுகிறோம்”..
/எதற்கிந்தத் தயக்கம். உயிர் எழுத்தில் உங்கள் கவிதை வந்ததற்கு வாழ்த்துக்கள்./
ஊக்கத்திற்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணாச்சி.
தம்பி, மனசைத் தொடும் கவிதை. இதேமாதிரி தேவையற்ற தயக்கங்கள் இனிமேலும் உனக்குத் தேவையில்லை :)
வாங்கண்ணா..வாங்கண்ணா.ரொம்ப சந்தோசம்.அவையடக்கத்துக்கும்,தன்னம்பிக்கயின்மைக்கும்
கொஞ்சந்தான் வித்தியாசம் மாதிரி தெரியும்.ஆனா,அது அப்படியில்ல. நீங்க எல்லாம் சொல்றதப் பாக்கும்போது நான் கொஞ்சம் ஓவராத்தான் பம்மிட்டனோ ன்னு தோணுது. நன்றி அண்ணா.தெம்பா இருக்குது.
உணர்வுகள் தானே கவிதை வடிக்க உதவுகிறது....பழைய சில நினைவுகளை உணர்த்திப் போவதில்தான் கவிதையின் வெற்றியிருக்கிறது....
அன்புடன் அருணா
தல.. நீங்க தயங்கித் தயங்கிப் பதிவிடறதாலதான் உங்க படைப்புகளின் தரம் உயரத்துல இருக்கு.. ஆனா நான் சின்னப்பையன்.. இளங்கன்று பயமறியாது.. பழமொழி தெரியுமில்ல உங்களுக்கு..!
@அன்புடன் அருணா
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.(மிகப்பெரிய தாமதமான நன்றிக்கு வருந்துகிறேன்)
@மதன்
நல்வரவு மதன்.சந்தோசமாயிருக்கு. அப்புறம் இன்னொன்னு.. நாங்களும் யூத்துதான்..யூத்துதான். யூத்த்..:)
ஹா.. ஹா.. சரிங்க..!
நல்லா இருக்கு. தொடரவும்.
நன்றி மஞ்சூர் ராசா!
Post a Comment