Wednesday, January 30, 2013

ஆனந்த விகடன் கவிதை

மாதவனும் இன்ன பிற குட்டிகளும்




முதன்முதலாகச் சீருடையும்
அலங்காரமாய் கழுத்துப் பட் 'டை' யும் அணிந்து
மழலையர் பள்ளி செல்லும் மாதவனை
அம்மா போட்டோ எடுத்துக்கொண்டாள்.

மாதவனுக்கும் இன்ன பிற குட்டிகளுக்கும்
வடிவங்கள் பற்றிய பாடத்தை
நடத்திய நாள் முதலே
உலகப் பொருட்கள் வடிவம் பெற்றன.

பிஸ்கட்டின் சுவையோடு ஒளிந்திருந்த செவ்வகத்தையும்
டிபன் பாக்ஸின் வட்ட வடிவத்தையும் கண்டுபிடித்து
தங்களின் ஆசிரியைக்கே சொல்லத் துவங்கிவிட்டனர்.

சுவர்களில் கைகளெட்டும் உயரங்களெல்லாம்
வடிவங்களாக வரைந்தும் அலுக்காததால்
அண்ணன்களின் நோட்டுகளில் கிறுக்கியும்
வாய் ஓயாமல் சொல்லியும் திரிகிறார்கள்.

நேற்று மாதவன் ஓவலான தன் தட்டில் விழுந்த
சர்க்கிளைப் பாதியாக்கி இரண்டு செமி சர்க்கிள்களாக்கினான்
அவற்றை மேலும் இரண்டிரண்டாக உடைத்து
நான்கு ட்ரையாங்கிள்களைச் சாப்பிட்டான்

  நன்றி ஆனந்தவிகடன் 30.1.13

4 comments:

இளங்கோ said...

தொடர்ந்து விகடனில் வருகிறீர்கள்..
வாழ்த்துக்கள்...

ச.முத்துவேல் said...

@ இளங்கோ
இப்போதைக்கு அவ்வளவுதான். நன்றி.

NKR R said...

செம கவிதைய்யா ... எனக்குப் பிடிச்சுது ...

ச.முத்துவேல் said...

@ நந்தா
:)
நன்றி!