Monday, August 5, 2013

காலம் அவ்வப்போது


காலம்
அவ்வப்போது
அற்பம் என
நான் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கும்
என் பார்வைக்கும்
இடையில்
பூதக்கண்ணாடிகளை வைக்கத்
தவறுவதேயில்லை

4 comments:

கீத மஞ்சரி said...

பூதக்கண்ணாடி வைப்பதையும் நாம் அறியாவண்ணம் வைத்துவிடுகிறதே... அதுதான் காலத்தின் சாமர்த்தியம். வாழ்வியல் யதார்த்தத்தை அழகுறப்பிரதிபலிக்கும் கவிதைக்குப் பாராட்டுகள்.

ச.முத்துவேல் said...

@ கீத மஞ்சரி
நன்றி

ப. தியாகு said...

நாம் பூதாகரமாக பார்ப்பவற்றை சிறியதாக்கிக்காட்டுவதற்கென அதே காலம் மற்றொரு கண்ணாடியையும் கைக்கொண்டிருக்கிறது.. :)

ச.முத்துவேல் said...

@ ப.தியாகு
உண்மைதான். நன்றி!