Tuesday, November 20, 2012

தீர்ப்பு


எண்ணிலடங்காத் துளிகலாலான
ஒற்றை நதி
நடக்கிறது
எண்ணிலடங்களடங்காக் கால்களால்
படைவீரர்களின் அணிவகுப்பாய்
தடைகளை உடைக்கிறது
வறட்சியை நனைத்து பசுமையாக்குகிறது
பாதைகளை உருவாக்குகிறது
எல்லைகளை அழிக்கிறது
தாவரங்களின் வேர் நாவுகளுக்கும்
விலங்குகளின்  நாக்குவேர்களுக்கும்
ஊர்கள் ஊர்களாய் தேடிச் சென்று
நடமாடும் தண்ணீர்ப் பந்தலாய்
தாகச்சூடு தணிக்கிறது

வீழும் அருவியில்
வானத்துப் புள்ளினங்களாவது அருந்தவியலுமா?
மீனினங்களாவது நீந்த முடியுமா?

ஒற்றைக்காலும் வானம் பார்க்க
தலைக்குப்புற விழுகிற அருவி
நீரின் வீழ்ச்சிதான்.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...

ச.முத்துவேல் said...

நன்றி தனபாலன்.

நந்தாகுமாரன் said...

உங்கள் கவிதைத் தொகுதி வெளி வந்துவிட்டதா என்ன ...

தமிழ் காமெடி உலகம் said...

கவிதை மிகவும் அருமை......பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

ச.முத்துவேல் said...

@Nundhaa

உங்கள் கேள்வியில் வேறு எதுவும் உள்குத்து இல்லையே?நேரடியான பதிலையே சொல்லிவிடுகிறேன்:)
உயிர் எழுத்து பதிப்பகத்தின் வெளியீடாக சென்ற ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியிலேயே என் முதல் தொகுப்பு வந்துவிட்டது.தொகுப்பின் பெயர், மரங்கொத்திச்சிரிப்பு

நந்தாகுமாரன் said...

Oh yeah now Muthu ... now I remember ... I wanted to purchase it but it somehow skipped my memory ...

anujanya said...

ஆஹா, நல்லா இருக்கு.

//தாவரங்களின் வேர் நாவுகளுக்கும்
விலங்குகளின் நாக்குவேர்களுக்கும்//

beautiful

ச.முத்துவேல் said...

@ anujanya
இதெல்லாம் தொழில் நுட்பம்தான்.
நன்றி!