Friday, June 12, 2009

ஒப்புக்குச் சப்பாணியா வேணா விளையாடுறேன்

இந்த 32 கேள்வி பதில் விளையாட்டெல்லாம் எனக்குன்னு வரும்போது அவ்வளவா ரசிக்க முடியல.பதில் சொல்லத் தெரியணுமில்ல! வாசுகிட்டயே கேட்டேன். 'வாசு, மாட்டிவிட்டுட்டீங்களே. பதில் எழுதலன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?' அப்படின்னு. 'அதெல்லாம் கோபப்படவோ, வருத்தப்படவோ மாட்டேன். ஆனா, என்ன தயக்கம். சும்மா எழுதுன்னு' சொன்னார். நானும் சும்மா எழுதுனாதான் என்ன என்கிற மன நிலையில்தானிருந்தேன். அதனால், சும்மா எதுவோ எழுதியிருக்கிறேன்.என்னைப் பற்றித் தெரிந்து யாருக்கு என்னவாகப்போகிறது.

வாசுவுக்கும்(அக நாழிகை பொன். வாசுதேவன்), குடந்தை அன்புமணிக்கும் என் மீதான அன்பிற்கும், ஆர்வத்திற்கும் நன்றி.




1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

கலைஞர் கருணாநிதியோட அப்பாப் பேரு.எங்கப்பன் ஒரு தி.மு.க.காரன்.(இதெல்லாம் அதிக அன்புன்னு நினைச்சுக்கணும்). தமிழ்ப் பெயரா இருக்கிறதால எனக்குப் பிடிச்சுருக்கு.. (புனைப்பெயர் வைக்கவேண்டியதெல்லாம் இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை என்பதால் வலைப்பூவிலும் இயற்பெயரே.)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அய்யோ! அத எதுக்குங்கக் கேட்டீங்க. நான் இப்பலாம் எதெதுக்கோ அழுதுடுறேன். பொசுக்கு பொசுக்குன்னு மிக எளிதாக. ஆனா, பெரும்பாலும் ஆனந்தக்கண்ணீர்தான்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பொறுமையா நிறுத்தி , கடைசிவரை நிதானமாக எழுதினால் பார்த்துச் சகித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கும், கொஞ்சம் அழகாகவும் கூட இருக்கும். ஆனா, opening லாம் நல்லாத்தான்யா இருக்கு என்கிற கதைதான்.


4.பிடித்த மதிய உணவு என்ன?
செட்டி நாட்டு பாணி சுவையுள்ள உணவு.



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?


முன்னல்லாம் அப்படித்தான். இப்ப அப்படி இல்லை. அது மத்தவங்களயும் பொறுத்து.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவிதான். தலையில எதாவது பாம்பு, கல் வந்து விழுந்துடுமான்னு ஒரு திகிலோட, தண்ணீரின் சத்தத்தோட, தலையில் பட் பட்டுன்னு அடிவாங்கிக்கிட்டு.(புத்தியும் கொஞ்சம் தெளியுமே)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
நபரையும், வயதையும், பாலினத்தையும், உறவுமுறையையும் பொறுத்தது.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது- நல்லாப் பழகினவங்களக்கூட வேலை சொல்லவோ, உதவி கேட்கவோ, அவசியமான நேரத்திலும் உளமாறத் தயங்குவேன்.
பிடிக்காதது- அது நிறைய. நான் ஒரு நல்ல சோம்பேறி.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது- இந்த உலகத்துல என் மேல அன்பு வச்ச முதல் ஜீவன்.ரொம்ப நல்லவ.

பிடிக்காதது- திறமையின்மை, ஆர்வமின்மை.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனக்கு ஒரு பெரிய உந்துசக்தியான ஒரு ஆளுமை -யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்-

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கரு நீல அரைக்கால் சட்டை( வெறும்..வெறும் அரைக்கால் சட்டை மட்டுமே. அப்பா! என்ன புழுக்கம்!)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
நான் ஒரு பாட்டுப் பைத்தியம். இப்ப இணையம் மற்றும் புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கியதிலிருந்தே பாட்டுக் கேட்கும் பழக்கம் மெல்லத் தேய்ந்து,இப்போ சுத்தமா இல்லாமலேப் போய்விட்டது வருத்தமாயிருக்கிறது.



13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு. கருப்பு...

14.பிடித்த மணம்?

நிறைய உண்டு. ஒன்னு, ஜாதி முல்லை.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

வாசு எனக்கிழைத்த வம்பை (சொம்மனாங்காட்டியும்) நான் யாருக்கும் செய்வதாயில்லை.(என்னா வில்லத்தனம்?)


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

போடா ஒம்போது!(என்ன அப்படிப் பாக்கறீங்க. பதிவோட பேருங்க இது)

17. பிடித்த விளையாட்டு?

கைப்பந்து, கேரம்.

18.கண்ணாடி அணிபவரா?

இதுவரை இல்லை. இணையம் மற்றும் புத்தகங்கள் படிப்பதால் கூடிய சீக்கிரம் அணியலாம்.

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எந்த மாதிரியான உணர்வு சார்ந்தத் தாக்கமாயிருந்தாலும் சரி. படம் பாத்து முடிச்ச பிறகு எவ்வளவு நேரம் அது நம்மைப் பிடிச்சு வச்சுக்கிட்டிருக்குங்குறதப் பொறுத்து, ரொம்ப நேரம் பாதிக்கிற படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
ராமன் தேடிய சீதை (தொலைக்காட்சியில்.)

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர் காலம். சிகரெட் பிடிக்க, தண்ணி அடிக்க, நல்லா இழுத்துப்போத்திட்டு காலையில ரொம்ப நேரம் தூங்க,குளிச்சுட்டு வந்தப்ப இருக்கமாதிரியேபுத்துணர்ச்சியாகவே இருக்கமுடியறதால,அணைச்சுக்க துணை தேட ன்னு நிறைய காரணங்கள்.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

அழுவாச்சி வருதுங் சாமி மற்றும் காலச்சுவடு.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அதையெல்லாம் நான் கண்டுக்கிறதில்ல. அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டுமே.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: பிடிக்காதவைகளிலிருந்து நீங்கலாக எல்லாமும்.
பிடிக்காத சத்தம்: பிடித்தவைகளிலிருந்து ‘' ‘' . (சட்டுன்னு எதுவும் பதில் தெரியலீங்க)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பாபா மந்திர். இந்திய,திபெத்,சீன எல்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சுமாராப் பாடுவேன். என் கணக்குப்படி 10 பேருக்கு 2 பேர் நல்லாப் பாடுவாங்க. அப்படியிருக்கும்போது இதுத் தனித்திறமையா?( ஆனா, பாடுன்னுச் சொன்னா பாட வராது. நானாக் கத்திக்கிட்டிருந்தா உண்டு)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

விரும்பாததுன்னு எடுத்துக்கிட்டா, தற்கொலை.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சில விசயங்களில் சுயக் கட்டுப்பாடற்ற , உறுதியில்லாத மனம்.

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

நல்லாச் சுத்தணும் நண்பர்களோட. அவ்ளோதான். வேணா, மூனாறு சொல்லலாம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ஒரு நல்ல படைப்பாளியாக அறியப்படணும்.ஏற்றுக்கொள்ளப்படணும்.

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

இது நிறைய.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்ந்து தீராத, அறிந்துவிட முடியாத வாழ்வை அறிதலே வாழ்க்கை.

9 comments:

ny said...

தலைப்பு cho chweet !!
உங்க talk ம் :)

ஆ.சுதா said...

நிறைய பதில்கள் மனதில் தோன்றியதை எழுதி இருக்கீங்க!
முத்துவேல்.

7வது பிடித்தது
பிடிக்காத்து.. 9வது பதிலில் இரண்டாவது!

(நானும் சும்மனாச்சுக்கும் பிண்ணூட்டம் போட்டுட்டேன்)

நந்தாகுமாரன் said...

ம்ம்ம் ... யாத்ரா, பைத்தியக்காரன், கென், ஜ்யோவ் இவர்களுக்கு பின் ஸ்வார்ஸ்யமான பதில்கள் மூலம் கேள்விகளின் மொக்கைத்தனத்தை அகற்றியிருக்கிறீர்கள் ... ரசித்தேன்

யாத்ரா said...

அன்பு முத்துவேல், அழகான பதில்கள் நண்பா, நிறைய இடங்களில் நீங்க என்ன பதில் சொல்லப்போறீங்கன்னு கணித்துக் கொண்டேயிருந்தேன், நான் நினைத்த மாதிரியே பல இடங்களில் உங்க பதில்கள் உங்க இயல்போட அழகா.

அகநாழிகை said...

முத்துவேல்,

ரசித்தேன்.

//26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சுமாராப் பாடுவேன். என் கணக்குப்படி 10 பேருக்கு 2 பேர் நல்லாப் பாடுவாங்க. அப்படியிருக்கும்போது இதுத் தனித்திறமையா?( ஆனா, பாடுன்னுச் சொன்னா பாட வராது. நானாக் கத்திக்கிட்டிருந்தா உண்டு)//

எனக்கு தெரிஞ்ச நண்பரொருவர் ‘ஜீவன்‘ அப்படின்னு பேரு. பாட வாய்ப்பு வாங்கித்தரவா ? போன் பண்ணச் சொல்றேன், ராத்திரி 10 மணிக்கு மேல.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ச.முத்துவேல் said...

@ தமிழினி
நான் பாத்துட்டேன். நன்றி

@கார்த்தி
தலைப்புப் பற்றி குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியாயிருக்குது. நன்றி.

@முத்துராமலிங்கம்
9ஆவதில் 2 ஆவது பிடிக்கலன்னு நீங்க சொல்றது பிடிச்சுருக்கு.எனக்கும் கூட அப்படித் தோனுது. என்னவோ நான் பெரிய திறமைக்காரன்னு அர்த்தமாகிறது.எல்லாருக்கும் எதாவது திறமை நிச்சயம் இருந்தே தீரும். நன்றி.

ச.முத்துவேல் said...

@ நந்தா
அவங்களவுக்கு (பக்கத்துல)இருந்ததுன்னா சொல்றீங்க. தெம்பாயிடுச்சி. நன்றி.

@யாத்ரா
நன்றி யாத்ரா

@அகநாழிகை
இப்ப ஜீவன்னு சொல்லிட்டு பேசப்போறது மனோவா, வேற யாராவதா? வேணாம். விட்டுருங்க. பாவம். அளுதுறுவேன்.

anujanya said...

நிறைய பேர் just to impress எழுதியிருந்தார்கள். பெரிய நடிகர்கள் தாங்களே ஒருவாக்கிய பிம்பத்துக்குள் சிக்கி ஒரே மாதிரி படங்களில் நடிப்பார்களே அதுபோல.

வெகு சிலரே (எனக்குத் தெரிந்தவர்களில்) உங்கள மாதிரி மனதுக்குப் பட்டதை எழுதி இருந்தார்கள். எனக்கும் 'திறமையின்மை' கொஞ்சம் நெருடியது. மற்ற படி அனைத்தும் அழகு. என் மன பிம்பம் சற்றும் சிதையவில்லை.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

அப்படியாச் சொல்றிங்க! சந்தோசம். நன்றி.
/என் மன பிம்பம் சற்றும் சிதையவில்லை. /

இதுக்கும் சந்தோசம்.ஆனா,பிம்பம்லாம் வளத்துக்க வேண்டிய அளவுக்கு நான் ஒன்னும் பெரிய விசயம் இல்லீங்க. நிழலையும் நிஜத்தையும் கூடிய சீக்கிரம் ஒன்னாக்கிடலாம்.