Monday, September 14, 2009

பா.திருச்செந்தாழை

பா.திருச்செந்தாழை என்னும் இளைஞர் மதுரையைச் சார்ந்தவர்.கடவு நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது சந்திக்கமுடிந்தது. பார்த்தவுடன் பிடித்துப்போனது எனக்கு.அதற்குமுன்புவரை (இன்றுவரையும்)அவரின் ஓரிரு கவிதைகளையும், ஒரேயொரு கதையையும் மட்டுமே படித்திருந்தேன்.

‘உங்கள் கதைகளில்environment conciousஅதிகமாக இருக்கிறது.அதை தொடர்ந்து நன்றாகச் செய்யுங்கள்’ என்று பா.வெங்கடேசன் திருச்செந்தாழையிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் திருச்செந்தாழை,’ எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து அதைத் தமிழில் சொல்லுங்கள்’ என்று சபையில் கேட்டுக்கொண்டார்.அதுதான் திருச்செந்தாழை. மளிகைக்கடையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி. நிகழ்ச்சியில் உணவுவேளையின்போது அவர் செல்பேசியில்’ கேப்பை இந்தவிலை, அந்த விலை’ என்று பேசிக்கொண்டிருந்தபோதுகூட நண்பர் யாருடனோ நையாண்டி செய்கிறார் என்றுதான் இருந்தேன்.

காலச்சுவடில் சிறுகதைத்தொகுப்பு வந்திருக்கிறது.ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் சிறுகதைகளின் இன்றைய நிலைபற்றி எழுதும்போது குறிப்பிட்டுஇள்ள மிகச் சில படைப்பாளிகளுள் திருச்செந்தாழையும் உண்டு.

இம்மாத உயிர் எழுத்து இதழில் இடம்பெற்றுள்ள அவரின் கவிதைகளைப் படித்து நான்...

வேண்டாம். நீங்களே படித்துப்பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.

கவிதைகள்

கனத்த உன் முலைத் திரட்சியால்

வெட்கித் திரும்பும் கல் ஸ்திரியே

உள்ளங்கை தீபத்துடன்

உனது புராதனக் காத்திருப்பின்

எத்தனையாவது பயணி நான்

மண்டபத் தனிமையில்

நான் சப்பித் தணிய நீ

தளர்த்தி விடுவிக்கும்

கல் முலையின் குளிர்வில்

துடித்தடங்கும் யென் குறி

*

எழுதிய ‘ ந’ வின் நுனியில்

ஒரு அலகினைச் செருகினாள்

பக்கவாட்டு நெளிவுகளில்

சில சிறகுகளை பொதிந்துவிட்டு

சுழியின் கீழே வாலிலிழுத்தாள்

கொண்டுவந்த கடுகினை

மையத்தில் ஒட்டி முடித்தபொழுது

ஒருமுறை உடல் சிலும்பி

ந பறக்கிறது

பிறகான எனது ந விலெல்லாம்

ஒரு காகம் கரைகிறது

*

பின் திரும்பியே வராத

பிள்ளையின் அம்மாவிற்கு

அவ்வப்போது காணநேரிடும்

பைத்தியக்காரர்களின்

பிளாட்பார மரணங்கள்

பின்னிரவு நெடுங்காய்ச்சலை

பரிசளிக்கின்றன.

*

புகைக்கு பழகிய பருவத்தில்

மிதித்து நசுக்கிய சிகரட்டிற்கு

சற்று தள்ளி அமர்ந்திருந்த நாடோடி

அக்கினி பகவானை மிதிக்காதீங்க

என்றதை சொல்ல விரும்புகிறேன்.

*

ஒரு உதட்டை கடித்துறிஞ்சுவதுபோல

ஒரு துரோகத்தை சிதைத்து பழிதீர்ப்பதுபோல

கடைசி கணத்தில் தற்கொலையின்

ருசியை உணர்வதுபோல

விரும்பி நிகழ்த்துகிற விபத்தைப்போல

ஒரு சிகரட்டை மிதித்தணைப்பது

*

ஒரு

கணத்தின்

எந்த விளிம்பில்

காத்திருக்கிறது

அது

-பா. திருச்செந்தாழை

18 comments:

மண்குதிரை said...

thankyou sir,

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி முத்துவேல்!

Ashok D said...

ஆறும் அருமை.

திருச்செந்தாழை
திரு செம்மை

நல்ல கவிதைகளின் பகிர்வுக்கு நன்றி
D.R.அஷோக்

Karthikeyan G said...

Thanks for sharing.. :)

His another superb work here:: http://www.keetru.com/puthiyakaatru/jan07/thiruchenthazhai.php

கே.பாலமுருகன் said...

பா.திருச்செந்தாழையின் கவிதைகளை ஏற்கனவே படித்திருக்கிறேன். மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. சில இடங்களில் குறியீட்டுத் தன்மைகளை செயற்கையான கட்டுமைப்புடன் கையாண்டிருப்பது தெரிகிறது. துணிவான பதிவுகளும்கூட. வாழ்த்துகள்.

நாடோடி இலக்கியன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே.ஒவ்வொரு கவிதையும் அருமை.


நேற்று உங்களிடம் சொன்னதுபோல் இப்போதைக்கு நானெல்லாம் கவிதை எழுதவே கூடாதென்பதை புரியவைக்குது இந்தக் கவிதைகள்.

காமராஜ் said...

பல முறை அவர் கவிதைகளைக்கடந்து வந்திருக்கிறேன்
ஒரு உலுக்கு உலுக்கும்.
சென்னையில் வாங்கி ப்படித்ததும் மாதுவிடம் பேச இருந்தேன்.
இப்போது உங்களோடு நல்ல பகிர்வு முத்துவேல்.

anujanya said...

அறிமுகத்திற்கு நன்றி முத்து. எல்லாமே நல்லா இருக்கு.

அனுஜன்யா

நந்தாகுமாரன் said...

அபாரமான கவிதைகள் ... ரசித்தேன் ... நன்றி முத்து

பா.ராஜாராம் said...

பகிர்வுக்கு நன்றி முத்து.உலுக்குது.இனி தேடனும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

!!!!!!

பகிர்வுக்கு நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

அற்புதமான வரிகள். பகிர்வுக்கு நன்றி

அன்புடன்
ஆரூரன்

selventhiran said...

நன்றி!

வால்பையன் said...

அவரு நம்பர் இருக்கா தல!

மதுரை போகும் போது சந்திக்கணும்!

போன தடவை மிஸ் ஆகிருச்சு!

யாத்ரா said...

நல்ல பகிர்வு முத்து, நன்றி.

யாத்ரா said...

நல்ல பகிர்வு முத்து, நன்றி.

சி. சரவணகார்த்திகேயன் said...

thanks for sharing..
http://www.writercsk.com/2009/09/68.html

ச.முத்துவேல் said...

நன்றி மண்குதிரை(sir? are u talking to me?)

நன்றி சென்ஷி

நன்றி அஷோக்

நன்றி கார்த்திகேயன்.பார்த்தேன் ரசித்தேன்


நல்வரவு பாலமுருகன்.ஒரு விமர்சனக் கட்டுரையே எழுதிவிட்டீர்கள் :) நன்றி

நாடோடி இலக்கியன்
அப்படியெல்லாம் யோசிக்காதீங்க. இப்ப என்னையே எடுத்துக்கங்க. நானெல்லாம் கவிதை எழுதலையா?!
எழுதுங்க. வரும்.
நன்றி


நன்றி தோழர் காமராஜ்.மாதுக்கிட்டப்(தோழர் மாதவராஜுக்கு இப்படியொரு பேர் இருக்குதா) பேசுறது நல்ல சுகம்.


நன்றி அனுஜன்யா

நன்றி நந்தா

நன்றி பா.ராஜாராம் இணையத்திலேயே நிறையப் படிக்கக்கிடைக்கும்.


நன்றி அமித்து அம்மா


நல்வரவு ஆரூரன்.நன்றி.


நன்றி செல்வேந்திரன்

நன்றி வால்பையன்.கவிதைகள் பத்திப்பேசறத விட்டுட்டு மத்த கதையெல்லாம் நல்லா பேசு:(
எண் கிடைச்சுச்சுல்ல:)


நன்றி யாத்ரா


நன்றி சரவணகார்த்திகேயன்