Sunday, October 11, 2009

என் பார்வையில் படைப்பாளிகள் - புதிய வாசகனின் புதிய முயற்சி

சாளரத்தில் தெரியும் வானம் - முன்னுரை - ச.முத்துவேல்

      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்
என் பார்வையில் படைப்பாளிகள் - புதிய வாசகனின் புதிய முயற்சி
தடாகம் வாசகர்களுக்கு வணக்கம். நான் , எழுத்தாளர் பொன்.வாசுதேவனுடன் மதிப்பிற்குரிய மனுஷ்யபுத்திரனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அப்போது வாசுதேவனின் கையிலிருந்த ரஸவாதி என்ற நூலின் தமிழாக்க நூலை வாங்கிப்பார்த்த மனுஷ்யபுத்திரன், அந்நூல் குறித்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தெரியப்படுத்தினார்.இதுபோன்ற ஒரு நூல் தமிழில் வந்திருப்பது குறித்து எங்காவது, யாராவது நான்கு வரிகள் எழுதினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று தன் எண்ணத்தை ஆதங்கத்தோடு தெரியப்படுத்தினார்.அச்சமயத்தில்தான் தடாகம் இதழில் எனக்கு ஒரு இடம் ஒதுக்கி தொடர்ந்து எழுத கவிஞர் நரனும், தடாகம் ஆசிரியரும் அன்போடு வற்புறுத்தியிருந்தனர். நான் இது பற்றி மனுஷ்யபுத்திரனிடம் குறிப்பிட்டு என் தயக்கங்களைப் பட்டியலிட்டபோது, அவர் என் தயக்கங்களை உதறி வாய்ப்புகளைப் பயன்படுத்தும்படி கூறினார். 'ஒரு வருட வாசிப்புப் பழக்கம் எப்படி உங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறதோ, அதுபோல் எழுதிப்பழகுவதும் அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும்‘ என்றார். இவ் வரிகள் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் மின்னஞ்சலில், படிக்கிற புத்தகங்களை பற்றி எழுதிப்பாருங்கள் என்று கூறியிருந்தார்.ஜெயமோகன், சுந்தரராமசாமி என எல்லாப் படைப்பாளுமைகளுமே இதையேதான் சொல்லியிருக்கிறார்கள்.” எழுது, எழுதுவதே எழுத்தின் ரகசியம்” என்கிறார் சுந்தர ராமசாமி.
இலக்கிய வாசிப்பில் நான் இரண்டு வயது குழந்தைதான். நான் வாசித்ததே மிகக் குறைவுதான் என்கிற நிலையில் படைப்பாளிகளைப்பற்றி எழுதுவதென்பது போதாமை நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.இருந்தபோதிலும் நான் வாசித்தவரையில்,வாசித்த படைப்புகளை மட்டும் முன்வைத்து படைப்பாளிகளை பற்றிய அறிமுகமாக எழுதலாமென்றிருக்கிறேன்.அறிமுகப்படுத்துவது மட்டுமே என் நோக்கம் என்றாலும் என் பார்வையில் அவர்களைப் பற்றிய எண்ணங்களையும் சேர்த்து எழுதப்போகிறேன். நன்கறிந்த படைப்பாளிகளை பற்றி எழுதுகிற அதே சமயத்தில் புதிய இளம்தலைமுறை படைப்பாளிகளையும் , அவர்களின் படைப்புகளையும் பற்றி எழுதுவது என் போன்ற புதிய வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும்,ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.தடாகத்தில் நான் எழுத இருப்பதின் பின்னணியும், காரணமும் இதுதான். ஒருவகையில் எழுதிப்பார்த்து என்னை வளர்த்துக்கொள்ள முயலும் தன்னலமும், அதேசமயத்தில் படைப்பாளிகளையும்,படைப்புகளையும் பற்றி அறிமுகப்படுத்தும் ஆக்கப்பூர்வமான எண்ணமுமே என்பதால் என் எழுத்துக்களில் உள்ள போதாமைகளை வாசக நண்பர்களும், சம்பந்தப்பட்ட படைப்பாளிகளும் பெரியமனதுடன் பொறுத்தருள வேண்டுகிறேன்.
உங்களின் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தடாகம் ஆசிரியருக்கோ ,எனக்கோ தெரியப்படுத்தி ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். நன்றி.
ச.முத்துவேல்
நன்றி-தடாகம்.
Thadagam_Logo_Eng

16 comments:

Ashok D said...

வாழ்த்துக்கள் சா.மு.

சென்ஷி said...

மகிழ்வான செய்தி முத்துவேல். தங்களின் புதுப்பரிமாணத்திலும் வெற்றிகரமான நடைபோட எனது வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் said...

அருமை முத்துவேல்!வாழ்த்துக்களும் அன்பும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.

Anonymous said...

வாழ்த்துக்கள். மகிழ்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஓஹ்.. இது நல்ல முயற்சி முத்துவேல். தொடர்ந்து செய்யுங்கள்.

நாடோடி இலக்கியன் said...

மகிழ்ச்சி நண்பரே.

வாழ்த்துகளும் அன்பும்..!

Unknown said...

All the best in advance.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களும்.

தேவன் மாயம் said...

வாய்ப்பை நன்கு பயன்படுத்திப் புகழ்பெற வாழ்த்துக்கள்!

அகநாழிகை said...

முத்துவேல்,
தடாகத்தில் ஏற்கனவே வாசித்தேன்.
வாழ்த்துக்கள்.

..பொன்.வாசுதேவன்

யாத்ரா said...

ரொம்ப மகிழ்ச்சி முத்து, வாழ்த்துகள், தொடருங்கள்.

விநாயக முருகன் said...

எழுது, எழுதுவதே எழுத்தின் ரகசியம்

தொடருங்கள்.வாழ்த்துகள் முத்துவேல்

ச.முத்துவேல் said...

நன்றி அஷோக்.
(சா.மு அல்ல,ச.மு)

நன்றி சென்ஷி.பார்க்கலாம். எந்தளவுக்குச் செய்கிறேனோ, தெரியவில்லை.

நன்றி பா.ராஜாராம் ஜீ.

நன்றி ஸ்ரீ

நன்றி அண்ணாச்சி

நன்றி சுந்தர்ஜீ

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.(முதல் பின்னூட்டமோ? நல்வரவு)

நன்றி அமித்து அம்மா

நன்றி தேவன் மாயம்

நன்றி வாசு.இல்லல்ல. ஆசிரியர் பொன். வாசுதேவன் அவர்களே:)

நன்றி யாத்ரா

நன்றி வினாயகமுருகன்

பிரவின்ஸ்கா said...

வாழ்த்துக்கள்..

- பிரவின்ஸ்கா

ச.முத்துவேல் said...

நன்றி பிரவின்ஸ்கா