Wednesday, December 30, 2009

படித்ததில் பிடித்த சிறுகதைகள்-2009

2009 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதைகளில், நான் படித்தவற்றில் மட்டுமேயிருந்து, எனக்குப் பிடித்த சில சிறுகதைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.இது நிச்சயம் ஒரு முழுமையான பட்டியலாகிவிடமுடியாது.இது தரவரிசையின் அடிப்படிடையிலானதுமல்ல. நினைவிலிருந்தே இவற்றை எழுதுவதால் விடுபடல்களும் இருக்கலாம்.

இக் கதைகள் எழுதப்பட்டவிதம் குறித்த என் வியப்பே, இந்தப் பட்டியலின் முதல்காரணியாக இருக்கிறது.பிறகே, அதன் உள்ளடக்கம், சொல்முறை, தளம்,செறிவு, உத்தி, தகவல்கள் ஆகியவற்றையெல்லாம் பொருட்படுத்தியிருக்கிறேன்.

1. பொம்மைக்காரி- பாவண்ணன் உயிர் எழுத்து(ஜூன்)
2. வெள்ளம் பாவண்ணன் வார்த்தை(ஆகஸ்ட்)
3. விஷக்கோப்பை யுவன்சந்திரசேகர்- வார்த்தை(ஜூன்)
4. புகைக்கண்ணர்களின் தேசம்- அ.முத்துலிங்கம்-வார்த்தை(ஜூலை)
5. எந்தங்கம் என்னையக் கொல்லுதாமா-வா.மு.கோமு-சுகன்(ஆகஸ்ட்)
6. காட்டின் பெருங்கனவு- சந்திரா-உயிர் எழுத்து(ஆகஸ்ட்)
7. வெளிறிய அந்திமாலை-குமாரநந்தன்- காலச்சுவடு.(டிசம்பர்)
8. ரவிக்கைக்குள் மறையும் வனம்-லக்‌ஷ்மி சரவணக்குமார்-அக நாழிகை,டிசம்பர்
9. அம்மாவின் யுத்தம்- நா.விச்வநாதன் உயிர் எழுத்து
10. வெயில் தோரணம்-ச.குமார்-உயிர் எழுத்து(டிசம்பர்)
11. வேட்டை- கண்மணி குணசேகரன் - மணல்வீடு(டிசம்பர்)


மேலும், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் மூன்று சிறுகதைகளும் பிடித்திருந்தது.மிருகத்தனம், அப்பா புகைக்கிறார், மற்றும் ஒன்று.


இவை தவிர இருள் விலகும் கதைகள் என்கிற சிறுகதைத் தொகுப்பும் இந்த ஆண்டிலேயே வெளியானது. இத்தொகுப்பிலிருக்கும் கதைகள் எந்த இதழிலும் வெளியிடப்படாமல், நேரடியாகத் தொகுப்பிலேயே வெளிவந்தவை.அந்த வகையில் இத்தொகுப்பையும் 2009 ஆம் ஆண்டு கணக்கிலேயே எடுத்துக்கொள்கிறேன். நல்ல கதைகளை அடக்கிய சிறுகதைத்தொகுப்பு.





8 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல தகவல் படிக்க முயற்ச்சிக்கிறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...
This comment has been removed by the author.
அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பகிர்வு நண்பா.. முடிஞ்சா இந்தக் கதைகளுக்கு லிங்க் கொடுக்கப் பொறுங்க..

நிலாரசிகன் said...

நண்பா,

நல்லதொரு பகிர்வு. அகநாழிகையின் முதல் இதழில் வெளியான பூனைக்குட்டி - பாவண்ணன் எழுதியதும் விகடனில்
அ.மு எழுதிய புதுப்பெண்சாதியும் மிக முக்கிய படைப்புகள்.

Anonymous said...

Nalla thervu nanbarey
ki.charles

Anonymous said...

Nalla thervu nanbarey
puthandu nalvazhthu
ki.charles

ச.முத்துவேல் said...

நன்றி ஸ்ரீ

நன்றி அமித்து அம்மா.புத்தாண்டு வாழுத்துக்களோடு.

நன்றி காபா.காலச்சுவடு கதை மட்டுமே இணையத்தில் கிடைக்கும். மணல்வீடு கதை இடம்பெற வாய்ப்பிருக்கிறது.

நன்றி நிலா.ஏற்கனவே பேசும்போதுகூட நீங்கள்,இக்கதைகளைப் பற்றி சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது. நல்ல கதைகள்தான் அவையும்.

நன்றி சார்லஸ்.
புத்தாண்டு வாழ்த்துகள்.