Thursday, June 19, 2008

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள்

ஆங்கிலத்தில் a என்ற ஒரு எழுத்து, ஒரு என்ற பொருள்பட அமைந்துள்ளது.அது தவிர I என்ற ஓரெழுத்து நான் என்ற பொருள்பட அமைந்துள்ளது.இவை தவிர ஓரெழுத்துச் சொற்கள் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் தமிழில் நிறைய சொற்கள் உள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் (தனித்தே நின்று பொருள் தருபவை)

ஆ - பசு (ஆ-வின் பால் )
ஈ - உயிரி
ஏ - விளிச்சொல்
ஓ - விளிச்சொல்
கோ - (மன்னர்)
கை - கரம்
மை - எழுது பொருள்
வை - கட்டளைச் சொல்(கீழே வை...)
பா - பாடல்
தா - கொடு
நா - நாக்கு,நான்கு...
தீ - நெருப்பு
தை -(மாதம்)
நீ - முன்னிலை சுட்டும் சொல்
பூ - மலர்
பை - கைப்பை
போ -கட்டளைச் சொல்
மா - பெரிய, மாங்கனி தொடர்பான ...
வா - கட்டளைச் சொல்

நினைவிலிருந்து கூர்ந்து எழுதப்பட்டவை மட்டுமே இவை.மேலும் பல சொற்கள் இருக்கும்.அவற்றை தெரிந்தவர்கள் ,கொடுத்து உதவலாம். மின்னஞ்சல் முகவரி-muthuvelsa@gmail.com.

‘’ம் ‘’-பற்றி ஒரு பார்வை

*குறுகிய மாத்திரையில் ஒலிக்கும்போது ஆம் என்ற பொருள்படும்.
*சற்று நீட்டி ஒலித்து, தொக்கி நிற்கும்போது கேள்வியாகிறது.
*நன்றாக நீட்டி ராகம் போட்டு ஒலிக்கும்போது,ஆச்சரியச் சொல்
*ஷோபா சக்தி அவர்களின் ஒரு புதினத்தின் பெயர் ‘ம்’ தான்.

4 comments:

அசோக் said...

நல்லா இருக்கு முத்து வேல் இன்னும் எழுதுங்க

ச.முத்துவேல் said...

உங்களின் ஊக்கம் உற்சாகம் அளிக்கிறது.வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

திருமங்கலத்தான் said...

கா என்றால் காடு என்று பொருள் தரும்.

ச.முத்துவேல் said...

நன்றி, திருமங்கலத்தான்.இதை எழுதிய பின்னர், இன்றுவரை ,மேலும் சில எழுத்துக்கள், சொற்களாயிருப்பதை அறியமுடிந்தது.