Monday, February 13, 2012

கல்கி கவிதைகள்




ஐயையோ

ஐயையோ என்று
சொல்லக் கற்றுக்கொண்டுவிட்டான் மாதவன்
இதுபோலவே இன்னும் சில 
மூன்றெழுத்து நீளச் சொற்களை
முழுமை குலையாமல் சொல்லும் அளவுக்கு
வளர்ந்துவிட்டான்
திடுக்கிடலாகவோ,துயரத்தாலோ
அல்லாமல் 
எப்போதும்எங்கும்எல்லாரிடமும்
சொல்கிறான்
பின் இணைப்பாக ஒரு சிரிப்பு வேறு
ஐயையோ என்ற சொல்
மொழியின் அலமாரியில்
துருப்பிடித்த,ஒட்டடை படிந்த
தன் இடத்திலிருந்து
வெல்வெட் பதியப்பட்ட
வெவ்வேறு புதிய புதிய இடங்களில்
அமர்ந்துகொள்கிறது
மயில் தோகைகளின் மேல்.

அதிசய மலரே...
மஞ்சளிலிருந்து
வாடாத சிவப்புக்கு 
நொடியில் நிறம் மாறும்
அதிசய
பூவரசம்பூவை
நீ வெட்கப்பட்டபோதுதான்
கண்டேன்
        நன்றி- கல்கி 05.2.12