Friday, January 2, 2009

ரசிகை-தபசி

இனிய வலைப்பூ நண்பர்களுக்கு

மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2009







கவிஞர் தபசி ”மயன் சபை”,”இன்னுமிந்த வாழ்வு”, ”குறுவாளால் எழுதியவன்”,”ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்”(1994), ”இன்னும் இந்த வாழ்வு”(2000) ”தோழியர் கூட்டம்” 2003, மற்றும் ”ரசிகை”(2003) ஆகிய கவிதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.



ரசிகை தொகுப்பில் பின் அட்டையில் காணப்படும் வரிகள் இவ்வாறு உள்ளது. “ தபசியின் கவிதைகள் எளிய சொற்கட்டுகளால் ஆனவை. வாழ்வின் தத்துவப் பொருளை மன அமைதியுடன் வெளிப்படுத்துவதோடு, புற நிகழ்வுகளை, அவற்றுக்கேயான முரண் நகையுடனும், அங்கதச் சுவையுடனும் எடுத்தியபம்புவை.”

நவீன அகம் புறம் என்ற சிற்றிதழில்( காலாண்டிதழ் 9) இவரின் செவ்வி இடம் பெற்றிருந்தது. மிக அருமையாக இருந்தது. இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் , இவரின் பதில்களும் எழுதத் துவங்கியிருக்கும் கவிஞர்களுக்கு பல திறப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன். ”உணர்தலுக்கும், உணர்த்துதலுக்குமான இடைவெளி குறையும்போது நல்ல இலக்கியம் பிறக்கிறது” என்கிறார். எனில், எளிமைப்படுத்துவதைத்தான் இவர் ஆதரிக்கிறார் என்பதை இவரின் கவிதைகளும் எடுத்துக்காட்டுகிறது. இன்னும் கூட நீண்ட செவ்வியாக அமைந்திருக்கலாம் என்ற ஆவல் ஏற்படுகிறது.

“ நவீன கவிதைகளின் சுதந்திரத்தை உணர்ந்துகொள்பவர்களுக்கு வேறு வடிவங்கள் உவப்பானதாக இருக்காது” என்கிறார். இது என் நெஞ்சில் நிலைத்துவிட்ட ஒரு கூற்று. ரசிகைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அல்லாமல், இன்னும் சில கவிதைகளை சில சிற்றிதழ்களில் படித்திருக்கிறேன். அந்தவகையில், ரசிகை தொகுப்பில், பல கவிதைகள் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை என்றுதான் என் இன்றைய பக்குவத்தில் சொல்லமுடிகிறது. எனினும் ,இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஞானம் கவிதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்ற சிறப்புடையது. உள்ளபடியே அழகான, ஆழமான, பகடித்தன்மை கொண்ட கவிதை. இது ஏற்கனவே புகழ்பெற்ற கவிதை என்பதால்

பலரும் இதைப் படித்திருக்கக்கூடும்.



ஞானம்



சித்தார்த்தனைப் போல்

மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு

நடுராத்திரியில்

வீட்டைவிட்டு

ஓடிப்போக முடியாது என்னால்



முதல் காரணம்

மனவியும்,குழந்தையும்

என்மேல்தான்

கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்

அவர்கள் பிடியிலிருந்து

தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல



அப்படியே தப்பித்தாலும்

எங்கள் தெரு நாய்கள் எமன்கள்

லேசில் விடாது

என்னைப் போன்ற

அப்பாவியைப் பார்த்து

என்னமாய் குரைக்கிறதுகள்



மூன்றாவது

ஆனால்

மிக முக்கியமான காரணம்

ராத்திரியே கிளம்பிவிட்டால்

காலையில்

டாய்லெட் எங்கே போவது

என்பதுதான்.

-தபசி.

6 comments:

Anonymous said...

//மூன்றாவது
ஆனால்
மிக முக்கியமான காரணம்
ராத்திரியே கிளம்பிவிட்டால்
காலையில்
டாய்லெட் எங்கே போவது
என்பதுதான்.//

இதுல இப்படி ஒரு வாழ்வாதாரப் பிரச்சினை இருக்கா?

anujanya said...

முதலில் புன்னகைக்க வைத்த கவிதை. துறவற மனப்பான்மையிலிருந்து அவனிருக்கும் தூரத்தைப் பகடி செய்யும் கவிதை.

//“ நவீன கவிதைகளின் சுதந்திரத்தை உணர்ந்துகொள்பவர்களுக்கு வேறு வடிவங்கள் உவப்பானதாக இருக்காது” என்கிறார். இது என் நெஞ்சில் நிலைத்துவிட்ட ஒரு கூற்று.//

அப்படியானால் மரபுக் கவிதைகளின் கட்டுப்பாடும், அவை தரும் சுவாரஸ்யமான சவால்களும் நவீன கவிதைகள் தராதது பற்று உங்கள் கருத்து?

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

வேலன் அண்ணாச்சி.
ஆமா, ரொம்ப இயல்பா எழுதியிருக்காரு. நன்றி அண்ணாச்சி.

ச.முத்துவேல் said...

நவீன கவிதைகள் புரிய ஆரம்பித்துவிட்டால், வேறு வகையிலான கவிதைகள் அவ்வளவாக உவப்பானதாக இருக்காது என்பது என் கருத்து.

Ashok D said...

தபசி கவிதை நல்லாயிருக்குங்க

ச.முத்துவேல் said...

ஆமாம் அஷோக். தபசி முக்கியமான கவிஞர். எளீமையும் , பகடியும் சேர்த்து அற்புதமாக எழுதுபவர். நன்றி.