அமல நாயகம் அவர்களை நீங்கள் யாரும் அறிந்திருந்தால், அது ஆச்சரியமானதுதான்.ஏனெனில், இவர் இதழ்களுக்கு படைப்புகளை எழுதி அனுப்பாமால், நேரடியாக தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார்.ஏற்கனவே கவிதைத் தொகுப்புகள் சில கொண்டுவந்திருக்கிறார். தங்கர்பச்சானின் செம்புலம் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருந்த “முந்திரித் தோப்பு” என்கிற கவிதைத் தொகுப்பைப் படித்தது நினைவிலிருக்கிறது. எப்போதாவது சற்று மிதமான வணிக இதழ்களில் இவரின் கவிதைகளை மட்டும் பார்த்திருக்க முடியும்.இவர் சிறுகதைகள் எதுவும் இதழ்களில் பார்த்திருப்பது கடினம்தான். அதனாலேயே இவர் பலருக்கும் தெரியாதவராக இருக்கிறார்.கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆசிரியப்பணியில் இருந்து வசித்துக்கொண்டிருப்பது கடலூர்.கண்மணி குணசேகரன் போன்ற செம்புல படைப்பாளி.
25 சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எந்தக் கதையுமே சோடை போனதில்லை என்பது என் கருத்து.5 கதைகள் மிக முக்கியமானது என்பதுவும்.காட்சியமைப்புகளை கலாபூர்வமாக விவரிப்பது, உணர்வு ஏற்படும் வகையில் எழுதுவது, தேவையற்ற பத்திகளை நீக்கவேண்டிய அவசியம் ஆகியவை இவரிடம் ஏற்படவேண்டிய முன்னேற்றங்கள்.தன் சொந்தக்கதைகளாக சிலதோடு நின்றுவிடாமல், ஊர் மக்களின் கதைகள் நிறையவும் எழுதியுள்ளார்.சிறுபிராயத்தில் நடந்ததைக்கூட துல்லியமாக நினைவுகூர்ந்து எழுதும் ஆற்றல் காணக்கிடைக்கிறது. நடு நாடு எனப்படும் செம்புல வட்டார கிராம வழக்குப் பேச்சில் உரை நடை அமைந்துள்ளது என்றாலும் எவ் வட்டாரத்தினருக்கும் இது பெருமளவில் சிரமம் ஏற்படுத்தாது.
மாரத்தான்,சில்லரை தேடி,வேலி, புருஷன் பொண்டாட்டி போன்ற கதைகளை படித்தபோது தாளமுடியாமல் சிரித்தது நினைவுக்கு வருகிறது.ஆனாலும் , வலியான வாழ்க்கையை கொண்ட வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை நினைத்து கடைசியில் வருத்தமே மிகும்.
சிங்க பொம்ம,காளையரு தாத்தா,மஞ்சப்பை,பலி ஆடுகள் போன்ற கதைகள் குறிப்பிடத்தகுந்த முக்கியமான கதைகள்.வெள்ளந்தியான கிராமத்து மக்களை விசயம் அறிந்தவர்கள் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்,அதைக்கூட அறிந்துகொள்ள முடியாமல், தன்னுடைய வாழ்க்கையை அவர்கள் வீணடித்துக்கொள்கிறார்கள், நிர்ப்பந்தமாகிவிடுகிறது போன்ற விசயங்களை முன்வைக்கும் கதைகள் .
இக் கதைகளைப் படித்துமுடித்திருந்த நாளிலேயே எழுதியிருந்தால ஓரளவாவது இவற்றின் தரத்திற்கு நெருக்கமாக நான் எழுதியிருக்கக்கூடும். ஆனால், படித்து சில வாரங்களாகிவிட்ட நிலையிலும், மனம் வேறு சூழல்களுக்கு சென்றுவிட்டு திரும்பிய காரணத்தாலும் ஆசிரியரின் உரையிலிருந்தே சில வரிகளை முன் வைப்பது பொருத்தமாய் இருக்கும்.
”என் கிராமத்து மனிதர்கள் எளிமையானவர்கள்.இனிமையானவர்கள்.
நம் மதிப்பீடுகளையும் பண்பாடையும், கலாச்சாரத்தையும் குற்றமான ஒன்றாக நாம் நினைக்கிறவர்களாய் இருந்தால், நாளை நம்முடையது என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் எதுவுமே இருக்காது...”
வம்சி புக்ஸ் நிறுவனத்தாரின் துணை நிறுவனத்தின் மூலம் நல்ல வடிவமைப்புடன் அச்சாகி வந்திருக்கிறது.
நூல் விபரம்
பழஞ்சோறு-சிறுகதைகள்
ஆசிரியர்-அமல நாயகம்(99527 45500)
முதற்பதிப்பு டிசம்பர் 2008
பக்கங்கள் 180
விலை ரூ.90.00
வெளியீடு
அமரபாரதி
பதிப்பாளர்&விற்பனையாளார்
84,மத்தலாங்குளத்தெரு,
திருவண்ணாமலை.
9443222997
21 comments:
பகிர்விற்கு நன்றி முத்துவேல்.
அமல நாயகம் என்றொரு படைப்பாளியின் ஆக்கங்களை அழகாக
தொகுத்திருக்கிறீர்கள்.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வாசிப்போம்.
பகிர்வுக்கு நன்றி...முத்துவேல் அவர்களே !!
அமல நாயகம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி முத்துவேல்.
அறிமுகத்திற்கு நன்றி!
முத்துவேல்,
பகிர்விற்கு நன்றி.
வாசிக்க முயல்கிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
அறிமுகத்திற்கு மிக்க நன்றி முத்துவேல்
நல்ல ஆறிமுகம். நன்றி.
வாசிப்போடு, எழுதவும் செய்யுங்கள்.
பகிர்விற்கு நன்றி திரு. முத்துவேல்
பகிர்வுக்கு நன்றி முத்து்...
அருமையான பதிவு முத்து,கோமு கதை ஒன்றோடு கூட இவருடைய கதை ஒன்றை ஒப்பிட்டு கூறியிருந்தீர்கள். தற்போது கவிதைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன், கூடிய சீக்கரம் கதைகளுக்கு வரவேண்டும்,உங்களிடமிருந்து இந்த தொகுப்பை வாங்கி படிக்க வேண்டும்,
நிறைய வாசிக்கிறீர்கள் போல ... வாழ்க வளர்க ... எழுதவும் செய்யவும் ...
நல்ல பகிர்வு .
மிக்க நன்றி
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முத்துவேல். பரவாயில்லை, கறாராக விமர்சனம் செய்யும் உத்தியும் உங்களுக்கு வருகிறது.
அனுஜன்யா
நன்றி சென்ஷி
நன்றி அ.மு.செய்யது
நன்றி அன்புமணி
நன்றி செல்வேந்திரன்
நன்றி வாசு
நன்றி நேசமித்ரன்
நன்றி தோழர்(எழுத முயற்சிக்கிறேன்)
நன்றி அமித்து அம்மா(முடிந்தால் படித்துப் பார்க்கவும்,சிறுகதை எழுத்தாளர் அவர்களே)
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி யாத்ரா. அவசியம் படியுங்கள். நான் ஒப்பிட்டிருந்த கதை, கோமுவின் கதையைவிட சிறப்பு என்பது என் எண்ணம்.
நன்றி நந்தா.ஓரளவு படிக்கிறேன்தான்.எழுத வரவில்லை. வறட்சியாக இருக்கிறது.என் அடுத்த பதிவைப் பார்க்கும்போது நீங்களே சொல்வீர்கள்.
நன்றி பிரவின்ஸ்கா
நன்றி அனுஜன்யா.
ஆமா, நாங்க ரெம்ப ஸ்ட்ரிக்கிட்டு. :)
அன்பு முத்து, இப்போது தான் ராஜமார்த்தாண்டன் அவர்களின் மேற்கண்ட வரிகளை அரவிந்தன் தளத்தில் படித்து விட்டு வந்தேன், அதை நீங்கள் சரியான இடத்தில் எடுத்தாண்டிருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது.
உண்மைதான் யாத்ரா. நானும் அங்கு படித்துவிட்டுதான் சில வரிகளை மட்டும் நீக்கிவிட்டு, இங்கே இட்டிருக்கிறேன். இப்படி நானும் எழுதவெண்டும் என நினைத்திருந்தேன்.தேர்ந்த வரிகளில் அவர் சொல்லியிருப்பதை, மெனக்கிடாமல் பயன்படுத்திக்கொண்டேன்.
நன்றி யாத்ரா.
முத்து - உங்கள் கிறுக்கல்கள் எங்கே
@ நந்தா
நீங்களும், மற்றவர்களும்-குறிப்பாக கிறுக்கல்களுக்கு பின்னூட்டம் இட்டிருந்தவர்களும்- நான் அப்பதிவை எடுத்ததற்காக பொறுத்தருளவேண்டும்.4,5 நாட்களில் மீண்டும் வெளியிடுகிறேன். பழைய பின்னூட்டங்களுடன். நன்றி.
உயிரோடை சிறுகதை போட்டிக்கு எனது கதை போட்டிருக்கிறேன். வருகை தாருங்கள்.
http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_10.html#links
முன்னமே பாத்தாச்சுங்க அன்புமணி. நன்றி
Post a Comment