Monday, February 23, 2009

படித்ததில் பிடித்தது

ஜனவரி மாத அம்ருதா இதழில் வெளியாகியிருந்த இக்கவிதையைப் பலரும் படித்திருக்கக் கூடும். இருந்தபோதிலும் இதுவரைப் படிக்காதவர்களுக்காகவும்,படித்தவர்களுக்கு மீள் வாசிப்பாகவும் அமையட்டும் என்று பதிவிடுகிறேன்.
(அம்ருதா வலைத்தளத்திலிருந்து எடுத்து ஒருங்குறிக்கு(UNICODE) மாற்றியுள்ளேன்.மற்றும், வரிகளின் அமைப்பு ஒருவேளை ,கீழே இருப்பதிலிருந்து மாறுபட்டிருக்கலாம்.)













நேரமிருந்தால்
- கணேசகுமாரன்

வீதிகளில் திரியும்
மனநிலை தவறிய ஒருவனின்
கண்களை உற்றுப் பாருங்கள்
அவன் அழுக்கு ஆடைகளை
முகர்ந்து பாருங்கள்
மனநிலை தவறியவர்
பெண்ணெனில்
அவள் நிர்வாண அலட்சியத்தைப் பாருங்கள்;
ரசிக்காதீர்கள்
எவருக்கும் புரியாத மொழியில்
இறைவனை அழைத்து
சுருங்கி காய்ந்து வெடித்த
தன் முலைகளை சுட்டி
முறையிடுபவளை நிதானியுங்கள்
உதிரம் உறைந்த யோனியை
ஒரு கையால் தட்டித் தட்டி
தரை அதிர நடக்கும் அவளின்
புட்டத்தின் மீதிருக்கும்
சூட்டுத் தழும்பினை
கவனித்து அதிருங்கள்
உங்களுக்கு
இந்தக் கவிதை கிடைக்கலாம்

11 comments:

Anonymous said...

good kavithai

thanks

ச.முத்துவேல் said...

@Ananymous
நன்றி,வருகைக்கும்,கருத்துக்கும்.

Anonymous said...

நிகழிவினை கவிதையாய் வடித்து... இந்த கவிதை தான் ஏன் எழுதியுள்ளேன் என்றதற்கு முடிவில் நீங்களும் இப்படிப் ஒரு நிகழ்வை பார்த்தால் உங்களுக்கு இப்படிப்பட்ட கவிதை கிடைக்குமென்று கூறி முடித்திருப்பது, கவிதைகளில் இதுவரை நான் முதன் முதலாய் பார்க்கிறேன்... மிக அழகு!

ச.முத்துவேல் said...

@ஷீ- நிஷி

நல்வரவு. மிக அழகாகக் கவிதையை உள்வாங்கிகொண்டு, நான் ரசித்த அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். மகிழ்ச்சியாயிருக்கிறது. இந்த இடுகையின் நோக்கம் நிறைவேறிவிட்டதின் மகிழ்ச்சி. ”இப்படியொரு கவிதை எழுத உங்களுக்கும் வரும் என்பதாகவும்,
2.இக்கவிதையில் என்னயிருக்கிறது என்று யாராவது கேட்கக்கூடுமாயின் ,அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு நிகழ்வைச் சந்திக்கும்போது, இக்கவிதைக்குள் என்ன இருக்கிறது என்பது கிடைக்கும்” என்று இன்னொரு பரிணாமமும் இதில் இருப்பது சிறப்பு. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

Ashok D said...

கணேசகுமாரன் கவிதை உண்மையில் அதிர வைத்தது மனதை.

ச.முத்துவேல் said...

நன்றி அஷோக்

suzhiyam0 said...

unaravezhuchikku innumoru peyar kavithayo

ச.முத்துவேல் said...

உணர்வெழுச்சி கவிதைக்கு அடிப்படையானதுதான். நன்றி சுழியம்

Taj said...

ரசித்தேன்.
கவிஞனின் பார்வையை
இங்கே அடிக்கோடிட்டுக் குறிப்பிட வேண்டும்.
-தாஜ்

Taj said...

ரசித்தேன்.
கவிஞனின் பார்வையை
இங்கே அடிக்கோடிட்டுக் குறிப்பிட வேண்டும்.
-தாஜ்

Erin Fields said...

This is a grreat post