”வார்த்தை” என்கிற மாத இதழ் பலரும் அறிந்ததே. ஆனால், இவ் விதழ் இணையத்தில் படிக்கக்கிடைக்கவில்லை என்றே நம்புகிறேன். எனவே, இம்மாத இதழில் இடம்பெற்றுள்ள தேவதேவன் அவர்களின் சில கவிதைகளிலிருந்து எனக்குப் பிடித்த மற்றும் எளிய கவிதை ஒன்றை,இணையத்தில் அல்லாது படிக்கமுடியாதவர்களுடன் பகிரலாம் என்ற நினைப்பில் இப்பதிவு.( வேற ஒன்னும் சொந்தமா எழுதறதுக்கு இல்லன்னு சொல்றதுக்கு, எப்படில்லாம் மூச்சப் பிடிச்சு சமாளிக்க வேண்டியதாயிருக்குது)
தந்தையரும் குழந்தைகளும்
அவன் தன் தச்சுப்பட்டறையில்
உண்மையாகவே அவைகளைச் செய்தாக வேண்டும்
அவன் குழந்தைகள் அவனைச் சுற்றி அங்கே
பொம்மைகளாக அவைகளைச் செய்து விளையாடி மகிழ.
-தேவதேவன்
9 comments:
முத்துவேல்,
நல்ல கவிதை. நானும் படித்தேன்.
இன்னும் சில கவிதைகளை சேர்த்து அறிமுகம் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
முதல்ல கொஞ்சம் புரியாத மாதிரி இருந்தது நண்பா.. நாலு தடவை படிச்சாத்தான் கொஞ்சமா புரியுது.. இன்னும் சில கவிதைகளையும் கொடுங்க.. :-)
நல்லக் கவிதை
நல்லதொரு பகிர்வு.
நல்ல பதிவு முத்துவேல், நானும் வார்த்தையில் படிச்சேன்.
அருமை.
இன்னும் சில கவிதைகளை தாங்கள் தந்திருக்கலாம்
என்று தோன்றுகிறது.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
நல்லா இருக்கு முத்துவேல். எனக்கும் இரண்டாவது வாசிப்பில்தான் புரிகிறது.
நல்ல கவிதை , பகிர்வுக்கு நன்றி
thanks for sharing, in paalithinai (gayathri) blogs few kav ithais of devadachan is available.
கவிதை நன்று. ஆனால் ஏன் கஞ்சத்தனம்? இன்னும் சில கவிதைகளையும் தந்திருக்கலாமே முத்து!
Post a Comment