Thursday, July 30, 2009

நினைவில் காடுள்ள மிருகம்

நினைவில் காடுள்ள மிருகம்

மலையாளம்  சச்சிதானந்தன்

தமிழில் நிர்மால்யா
 
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
அவள் தோளில்
சதுப்பு நிலங்களின் குளிர்
அவள் முடிக்கற்றைகளில்
வனப்பூக்களின் கடும்நெடி
அவள் விழிமணியில்
பாறைகளில் தெறித்துவிழும்
காட்டுச் சூரியன்
அவள் வாயில் காட்டாறுகள்
சந்திக்கின்றன.
அவள் நாவில் காட்டுத்தேன்
ஊறுகிறது
அவள் செவிகளில்
இடிமேகங்கள் முழங்குகின்றன
அவள் ரத்தத்தில்
காட்டுயானைகள் பிளிறுகின்றன
அவள் இதயத்தில்
காட்டு நிலவுகள் பூக்கின்றன
அவளது சிந்தனைகள்
காட்டுப் பாதைகளினூடே
பாய்ந்து செல்கின்றன
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
என் நினைவில் காடுகளுண்டு

நன்றி- எழுத்தாளர் பாவண்ணன்

16 comments:

நந்தாகுமாரன் said...

என்ன பாஸ் நிறைய படிக்கறீங்க போல ... அவ்வப்போது எழுதவும் செய்யுங்கள் ... ஏற்கனவே வாசித்த கவிதை எனினும் மறுபடி வாசிக்கவும் நன்றாக இருக்கிறது ... பகிர்வுக்கு நன்றி

சென்ஷி said...

நந்தா கூறியதை வழிமொழிகின்றேன். கவிதைகள் முத்துவேலிடமிருந்து வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு!

யாத்ரா said...

நல்ல பகிர்வு முத்து,

இந்த நிர்மால்யா தான் கமலாதாஸ் அவர்களோட சந்தன மரங்கள் சிறுகதைத் தொகுப்பையும் மொழி பெயர்த்தாரென்று நினைக்கிறேன், நல்ல தமிழாக்கம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சென்ஷி கூறியதை வழிமொழிகிறேன்.
:)))

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
நேசமித்ரன் said...

நல்ல மீள் பதிவு
நீண்ட வருடங்கள் உறங்க விடாமல் செய்த வரிகள்
பின்னூட்டிய பிரியத்திற்குரியவர்கள் சொன்னது போல உங்கள் கவிதைக்கான காத்திருப்பு நீண்டபடி இருக்கிறது கவிஞரே

குடந்தை அன்புமணி said...

பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே... நல்ல கவிதை.

பிரவின்ஸ்கா said...

பகிர்வுக்கு மிக்க நன்றி

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

இளையவாலி said...

நன்றாக உள்ளது
உங்கள் கவிதை தொடர வாழ்த்துகிறேன்.
கவிஞர்வாலிதாசன்
முகவை-1
9894887705

ச.முத்துவேல் said...

வருகை தந்து , பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. நிறையப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இணையத்தில் முன்போல் செயல்படமுடியவில்லை.கூடுதல் வேலைகளும் காரணம். ஆனால், இதுவரையும் படித்திருப்பதும் எப்போதும்போல்தான். நான் கவிதைகள் எழுதாமலிருப்பது எனக்கும் இழப்பாகத்தானிருக்கிறது. என்ன செய்வது. ஒன்றும் தோன்றவில்லையே( நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பன்றேன் :)

தங்கள் அனைவரின் அன்புக்கும் மீண்டும் நன்றி.தாமதத்திற்கு வருந்துகிறேன்

துபாய் ராஜா said...

ஏற்கனவே படித்து,ரசித்த கவிதை.

நல்லதொரு பகிர்வு.

anujanya said...

இதுதான் முதல் முறை படிக்கிறேன். நல்லா இருக்கு.

நிறைய வாசியுங்கள். நிச்சயம் முத்துவிடம் கவிதையும் கவிதையில் முத்துகளும் கிடைக்கும் :). நாங்கள் காத்திருக்கிறோம்.

அனுஜன்யா

கலப்பை said...

anbu muthuvel.kavithi thappa print aakiyullathu.aaval alla.athan entru erukkavendum. vee.ramasamy

இளங்கோ கிருஷ்ணன் said...

திடிரென இக்கவிதையைப் படிக்க வேண்டும் எனத் தோன்றியது.. கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தோடுதான் இதன் தலைப்பை கூகுளில் தேடினேன். அது உங்கள் வலைப்பூவுக்கு அழைத்து வந்திருக்கிறது.. மகிழ்ச்சி நண்பா.. வாழ்த்துக்கள்

ச.முத்துவேல் said...

@இளங்கோ கிருஷ்ணன்
மகிழ்ச்சி...

ram said...

Can you suggest me the book name or author contact details