
ஒவ்வோர் இரத்தப்பிரிவு கொண்டவர்களுக்கும்
குண நலன்களையடக்கிய
பட்டியலொன்று
எனக்கு மின்னஞ்சலில் வருவதற்குமுன்புவரை
முடிவுகள் எடுப்பதில்
மிகவும் தாமதிக்கும் நான்
சட்டென மாற்றிக்கொண்டேன்
எனது முடிவை.
என் இரத்தப்பிரிவின்படி
நான்
விரைந்துமுடிவெடுப்பவராம்.
நன்றி- உயிரோசை இணைய வார இதழ்
20.10.09
18 comments:
ஜோசியம் ரத்தப்பிரிவு வரை வந்துவிட்டதா. அடடே, விஞ்ஞானத்தோடு போட்டியிட்டு முந்துகிறதே.
ம்ம்ம்ம்ம்ம்.... :)
உண்மைதான் முத்துவேல்.
-ப்ரியமுடன்
சேரல்
அன்பு ச.முத்துவேல்,
எனக்கும் இதுபோலவே நேர்ந்திருக்கிறது. நான் லிப்ரன் என்பதால், லிண்டா குட்மேன் படித்து, நீலம் எனது வண்ணம் என்ற அடையாளம் வந்தது. புத்தகப்பிரியர்கள் என்ற கூற்றை நேராக்கினேன், அலமாரியில் நிறையும் புத்தகங்கள் அதற்கு சாட்சி. ஜோசியமோ அல்லது ஒரு புள்ளி விபரமோ நானும் லிப்ரன் குண நலன்களை கைக்கொள்ள ஆரம்பித்தேன்.
எல்லோருக்கும் வாய்க்கிறது இது போல...
வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகவன்
அது ரத்ததித்தினலா?இல்லை அதில் கலந்திருக்கும்??
நல்ல கவிதை முத்துவேல்.
உயிரோசையிலும் வாசித்தேன்.
- பொன்.வாசுதேவன்
நச்!
வித்தியாசம்.. யதார்த்த நிலையும் கூட..
நல்ல கவிதை முத்துவேல். உயிரோசையில் உங்கள் கவிதை வந்தமைக்கு வாழ்த்துகள்.
ஈமெயில் படித்து உள்வாங்கியதை அழகா கவிதையா வெளிக்கொண்டு வந்துட்டீங்க :)
ரசிச்சு படிக்கும்படி இருந்தது.
நல்லதொரு கவிதை நண்பரே :)
உயிரோசைக்கு வாழ்த்துகள்
எளிய சொற்களில் நிகழும் வார்த்தை ரசவாதம் கவிதையாகிறது முத்துவேலிடம்
நல்ல கவிதை முத்து
//சட்டென மாற்றிக்கொண்டேன்
எனது முடிவை.
என் இரத்தப்பிரிவின்படி
நான்
விரைந்துமுடிவெடுப்பவராம்.//
ம்ம்...நல்லவேளை ஜாதகப்படின்னு சொல்லாம விட்டீங்களே....
கவிதையில் உண்மை உலவுகிறது.
//இரண்டாவது வகையே, பாராட்டப்படுபவனுக்குப் பயன்தரக் கூடியது என்று கருதுகிறவன் நான். //
இதற்கான தகுதி எனக்கில்லை என்றே எண்ணுகிறேன்...
நன்றி...
க. பாலாசி
நன்றி தோழர் காமராஜ்
நன்றி அஷோக்
நன்றி சேரல்
நன்றி ராகவன். நல்வரவு.
நன்றி தண்டோரா.( ஆகா, ஆரம்பிச்சாட்டாருப்பா)
நன்றி வாசு
நன்றி கருணாகரசு. நல்வரவு.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி ஸ்ரீ
நன்றி உயிரோடை
நன்றி அமித்து அம்மா
நன்றி நிலாரசிகன்
நன்றி நேசமித்ரன்
நன்றி வேல்கண்ணன்
நன்றி க.பாலாசி. நல்வரவாகுக.
/இதற்கான தகுதி எனக்கில்லை என்றே எண்ணுகிறேன்.../
அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. மனசிலப் பட்டத தயங்காமச் சொல்லிடுங்க. அவ்வளவுதான்.:)
நண்பரே... நலமா ? ரொம்ப நாளாச்சு பேசி... நேரம் கிடைக்கையில் ஒரு முறை அழையுங்கள்.......
nallarukku.
-Pravinska.
@சேவியர்
அண்ணா. ரொம்ப சந்தோசம்.உங்கள் எண்ணுக்கு அழைத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியிருப்பதாகவே 2 நாட்களாக நிலைமை. எண் மாற்றமில்லையே! என்னை மின்னஞ்சலிலோ, பேசியிலோ தொடர்பு கொள்ளுங்கள். ஆவலாயிருக்கிறேன். நன்றி.
நன்றி பிரவின்ஸ்கா.
Post a Comment