Thursday, April 14, 2011

நீ-யும்


கேரம் போர்டில்
இப்போது உன்முறை
நீ
வெற்றிகளை அடுக்கவில்லை
வெற்றியை நோக்கி முன் நகரவில்லை
எதிராளியின் வெற்றிக்கு தடைபோடவில்லை
துணை போகவில்லை
ஒருமுறை சுண்டிவிட்டாய்
எதிலும் தொட்டுக்கொள்ளாமல்
சென்றுவந்தது
இம்முறை
விளையாடிவிட்டாய்
நீயும்

10 comments:

சி.பி.செந்தில்குமார் said...

காதல் VS கேரம் = கவிதை??!!!

கவிஞர் இசை said...

nalla mozhi . nalla kavithai

rajasundararajan said...

ஆஹா! எளிமையின் உச்சம். அஃதோடு உட்பொருள் கூடி அமைந்திருக்கிற ஒரு நல்ல கவிதை.

கீதமஞ்சரி said...

வாய்ப்புகள் வலிந்தே இழக்கப்பட்டனவோ... தெரியவில்லை.

எனினும் ரசிக்கிறது சுவடுகள் களையப்பட்ட வெற்றாட்டம். கவிதை அழகு.

ச.முத்துவேல் said...

@ CPS
காதல்?
சரி, அப்படியும் இருக்கட்டும். நன்றி

@டங்கு டிங்கு டு
நன்றி நண்பா.தெம்பாக இருக்கிறது.

@ராஜசுந்தரராஜன்
இந்தக் கவிதையை எழுதிமுடித்த இரவில் மிகவும் பரவசம் அடைந்திருந்தேன்.ஆனால், சில நாட்களுக்குப் பிறகு படித்துப்பார்த்தபோது, பரவசம் வடிந்து நின்றது.இப்போது நீங்கள், இசை மற்றும் நண்பர்களெல்லாம் குறிப்பிடும்போது அன்றிரவு எனக்கேற்பட்ட பரவச நிலையில் அர்த்தம் இருக்கிறது என்று நம்புகிறேன்.மீண்டும் அதேபோல் கொஞ்சம் பரவசம் அடைந்துகொள்கிறேன். நன்றி, சார்.

@கீதா
நன்றி.

Ashok D said...

அட சூப்பர்பா...

எனக்கு பரவஸம் வந்து போச்சு

ச.முத்துவேல் said...

@அஷோக்
மெய்யாலுமேவா!!
சந்தோசமா இருக்குதுப்பா...
நன்றி அஷோக்.

ஜெயமோகன் said...

நல்ல கவிதை முத்துவேல். எளிமையாக சகஜமாக அமைந்திருக்கிறது

வாழ்த்துக்கள்

ச.முத்துவேல் said...

@ ஜெயமோகன்
சார்,உங்கள் பின்னூட்டத்தை இதுவரை எத்தனை முறை படித்திருப்பேன் என்று என்னாலேயே கணக்கு வைத்துக்கொள்ள முடியாது. என்ன சொல்ல..!

நன்றி குருவே.

ச.முத்துவேல் said...
This comment has been removed by the author.