Monday, March 16, 2009

அய்யப்ப மாதவனின் நிசி அகவல்-விமர்சனக்கூட்டம்


கவிஞர் அய்யப்பமாதவனின் ஆறாவது தொகுப்பான நிசி அகவல் விமரிசனக் கூட்டம் 15-03-09 அன்று, சென்னையில் நடைபெற்றிருந்தது. கவிஞர் அ.மா.(முடியல..கை வலிக்குது) என்னையும் அன்போடு அழைத்து இருந்தமையால் சென்றேன். சொல்லப்போனால், நான் கலந்துகொள்ளும் நவீன இலக்கியவாதிகள் சார்ந்த முதல் நிகழ்ச்சி என்பதே என் நிலையைச் சொல்லிவிடும். ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில் நாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக(விமரிசனத்திற்கு) வந்திருந்தவர்கள்

1.ஞானக்கூத்தன்
2.ஸ்ரீநேசன்
3.தேவேந்திரபூபதி
4.பா.வெங்கடேசன்
5.யவனிகா ஸ்ரீராம்
6.தாராகணேசன்
7.அஜயன்பாலா

கூட்டத்திற்கு முதல் ஆளாகச் சென்றவன் நான்தான். ஸ்ரீ நேசனை ஏற்கனவே தெரியும் என்பதால்,முன்கூட்டியே சென்றால், சந்தித்து ஏதோ கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே என்பதால் அப்படி. நான் நுழையும்போதுதான் அ.மா உள்ளெ யாரோ ஒருவரோடு வந்தார். பேசியிருக்கிறேனே தவிர, நேரில் பார்த்ததில்லை. புகைப்படத்தில் பார்த்ததை வைத்துக் கண்டுகொண்டேன்.(இதுலல்லாம் நம்மள அடிச்சுக்க முடியாது.ஆனா,என்ன ,அந்தக் கூட்டத்துல வந்த பலரும் புகைப்படத்துக்கும் அவங்களுக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லாம, வயசானவாங்களா இருந்தாங்க.). அ.மா ஏற்பாடுகளையெல்லாம் பாக்கப்போயிட்டாரு. கூட வந்தவரு மட்டும் நின்னுட்டிருந்தாரு.இவரைப் பாத்திருக்கோமே ன்னு யோசிச்சிட்டே இருக்கும்போது ஆங். (நாம யாரு), இவரு கண்டராதித்தனாச்சேன்னு யோசனை வரவும், கேட்டேன். அவரேதான்.அவர்கிட்ட ஆரம்பிச்சேன், என் மொக்கையை.


கொஞ்ச நேரத்துல ஆளுங்கள்லாம் வர ஆரம்பிச்சாங்க. நரன் வந்தாரு. அறிமுகப்படுத்தினாங்க. என் பேரைச் சொன்னதும் ச.முத்துவேலா? ன்னு initial ஐ சொல்லிக்கேட்டாரு.( நமக்கு முன்னால நம்ம பேரு போயிருக்குதே. இது ஒன்னுதாங்க இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கிற சுகம்) அட, நம்மளையும் தெரிஞ்சிருக்குதேன்னு நினைச்சுக்கிட்டு, அப்படியே நரனோட ஐக்கியம் ஆயிட்டேன்.உயிரோசைய வச்சுத்தான் நிறையப் பேசினோம்.


படைப்பாளிகள் வரவர கூட்டம் ஆரம்பிச்சது. அப்பப்பா..! நவினத் தமிழிலக்கியப் படைபாளிகள் பெரிய அளவில நிறைய பேரை அங்கப் பாக்க முடிஞ்சதுல எனக்கு சந்தோசம். சும்மா, எனக்கு ஞாபகத்துல வர்றவரையிலும், எனக்குத் தெரிஞ்ச முகங்கள் வரையிலும், நான் பேசித் தெரிஞ்சுக்க முடிஞ்ச முகங்கள் வரையிலுமான பட்டியல்(பெரிசா இருக்கும்..) கீழே.

1.கவிஞர் சுகுமாரன்
2.தேவிபாரதி
3.அழகிய சிங்கர்
4.ரா.ஸ்ரீனிவாசன்
5.கௌதமசித்தார்த்தன்
6.ஜெ. ஃபிரான்சிஸ்கிருபா
7.குமார் அம்பாயிரம்
8.மதுமிதா
9.தமிழ் நதி
10.இளங்கவி
11.தி.முரளி
12.பயணி
13.லக்‌ஷ்மி சரவணகுமார்
14.கண்டராதித்தன்
15. நரன்
16.கடற்கரய்
இன்னும் பலர்…

எனக்குத் தெரிஞ்சது, நினைவு வந்தது அவ்வளவுதான்.

ஒரு விசயம் நல்லாத் தெரிஞ்சது. நவீன இலக்கியம் நானூறுப் பேருக்குள்ளத்தான் விக்கிரமாதித்யன் கவிதை எழுதின மாதிரி, அங்க வெறும் படைப்பாளர்கள் மட்டுந்தான் இருந்திருப்பாங்கன்னுத் தோனுது. வாசகர்ங்கிற அளவில மட்டுமே யாரும் இல்லைன்னு நினைக்கிறென். வேணுமின்னா என்னைச் சொல்ல முடியும். ஆனா, தமிழுக்கு வந்த சோதனை, நானும் கொஞ்சம் கவிதைகள் எழுதிட்டேனே.

வீட்டூக்குக் கிளம்பறப்ப கொஞ்ச தூரம் எனக்கு வழித்துணை, லக்‌ஷ்மி சரவணகுமார்தான்.
இந்த நிகழ்வை வச்சு என்னால, இப்போதைக்கு இதுமட்டும்தான் எழுதமுடியும். மத்தபடி, விமரிசனம்,கருத்து, தொகுப்புரை எல்லாம்..கொஞ்ச நாள்போவட்டும். பார்க்கலாம்.

7 comments:

ஆதவா said...

அடடா.... கடைசியில விஷயத்தைச் சொல்லாம போயிட்டீங்களே.. இந்தமாதிரி கூட்டத்திற்கெல்லாம் போகும் அளவுக்கு நான் எதுவும் படைக்கவுமில்லை... அப்படியே போனாலும் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்...

anujanya said...

அப்புறம், விமர்சகர்கள் பேசியது, உங்கள் வாசிப்பு/விமர்சனம் இவற்றையும் எழுதுங்கள். சுகுமாரனிடமும், அய்யப்ப மாதவனிடமும் பேச முடிந்ததா?

விழா நாயகனுக்கு வாழ்த்துகள்.

அனுஜன்யா

யாத்ரா said...

இவ்வளவு பேரையும் பார்க்கையில் உண்டாகிற அதிர்வை இப்பதிவின் மூலமாக எனக்குள்ளும் செலுத்திவிட்டீர்கள்

ச.முத்துவேல் said...

@ஆதவா
சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளர்ந்ததாத் தெரியல.
அப்புறம், நிங்க சொல்ற அதே அளவுதான் என் நிலைமையும்.பார்வையாளனாப் போறதுக்கு,பெரிசா ஒன்னும் தேவைப்படல. நன்றி. விசயம் பற்றி, விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்.

ச.முத்துவேல் said...

@அனுஜன்யா
விடமாட்டிங்க போல. ஊக்கப்படுத்துவதற்கு நன்றி.அ.மா விடம் பேசினேன்.
/விழா நாயகனுக்கு வாழ்த்துகள்../
கண்டிப்பாய் தெரிவிக்கப்படும். நன்றி.

ச.முத்துவேல் said...

@யாத்ரா
ஆமாம் யாத்ரா. அதிர்வுதான். நான் அனுபவிச்சதும். நல்ல அனுபவம். நன்றி.

M.Rishan Shareef said...

கூட்டத்துக்கு என்னால் போகமுடியா வெறுமையை நீக்கியது உங்கள் பதிவு.நன்றி !

எல்லோரும் என்ன கலந்துரையாடினீர்கள் என்றும் விவரித்திருக்கலாமே நண்பரே ?