Wednesday, March 25, 2009

அப்பாஸ் அவர்களின் கவிதை.

துப்பாக்கி

துப்பாகி என்றால்
என் மகள் கேட்கிறாள்
சுடுவதற்கு
யாரை
விரோதிகளை
விரோதிகளை என்றால்
உனக்கு பிடிக்காதவற்றைச் செய்பவர்களை
அப்படியென்றால்
எல்லோரையுமா
நானுமா
இல்லை
தேசத்தை அபகரிப்பவர்களை
தேசம் என்றால்
அபகரிப்பவர்கள் என்றால்
திருடர்களை
திருடர்கள் என்றால்
உனது பொருளை
உன் அனுமதியின்றி
எடுத்துச் செல்பவரை
அனுமதி என்றால்
சுதந்திரம்
ஓ அதுதான் துப்பாக்கியா.

-ஆறாவது பகல் தொகுப்பிலிருந்து .

அப்பாஸ் அவர்களைப் படித்ததில்லை. அவரின் மரணம் அவரை வாசிக்கத் தூண்டியதோ என்னவோ? இப்போதுதான் ஆறாவது பகல் தொகுப்பைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.உயிர் எழுத்துப் பதிப்பகத்தின் அப்பாஸ் கவிதைத் தொகுப்பு”முதலில் இறந்தவன்” என்கிற தொகுப்புக்காக பணம் அனுப்பிக் காத்திருக்கிறேன். ஆனால், புத்தகம் வரும் முன்னமே, அவர் இறந்து விட்டார் என்கிறச் செய்தி வந்துசேர்ந்துவிட்டது.

அவருக்கு அஞ்சலியாக இப்பதிவு.

14 comments:

ஆதவா said...

கவிதை ஆரம்பித்து முடித்த விதம் பிரமாதமாக இருக்கிறது.

அவரது மரணம் இலக்கியத்திற்கு ஒரு இழப்புதான்..

எனது அஞ்சலிகள்!!

Anonymous said...

சமீபத்துல முருகேசபாண்டியனின் புத்தகத்தில் அப்பாஸ் பற்றிப் படித்து அவரது எழுத்துக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்குள்....

இள வயதிலேயே அப்பாஸின் மறைவு வருத்தப்பட வைக்கிறது.

இதைபோலவே சுகந்தி சுப்பிரமணியம், (சுப்ரபாரதிமணியனின் மனைவி)அவர்களின் மறைவும்.

யாத்ரா said...

ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி தேற்றிக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது, கலைஞனுக்கு மரணமில்லை.

Anonymous said...

கேள்வி பதிலில்... பயணமாகும் கவிதை பலவாறு சிந்திக்கவைக்கிறது.

நல்ல பகிர்வு நண்பரே!

குடந்தை அன்புமணி said...

சமீபத்தில்தான் அவரைப்பற்றி நண்பர் ஒருவர் sms அனுப்பினார். அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக... இப்போது இறந்துவிட்டார் என்று தங்கள் பதிவின் மூலம் அறிகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். (இதுவரை 4 புத்தகங்கள் எழுதியிருக்கிறாம். 1. வரைபடம்மீறி
2.வயலட் நிற பூமி 3.ஆறாவது நிலம்
4.முதலில் இறந்தவன்.) இதுவரை வாசித்ததில்லை.

மண்குதிரை said...

நல்ல கவிதை.

சுதந்திரத்தைப் பற்றி சுகந்தி சுப்ரமணியனும் சிறப்பான ஒரு கவிதை எழுதியிருக்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

ச.முத்துவேல் said...

@ஆதவா
கவிதை குறித்தும், அவரின் இழப்பு குறித்தும் நீங்கள் சொல்லியிருப்பது பொருத்தமான கருத்துக்கள்.
நன்றி.

ச.முத்துவேல் said...

@வடகரைவேலன்
பகிர்வுகளுக்கு நன்றி, அண்ணாச்சி.

ச.முத்துவேல் said...

@யாத்ரா
/கலைஞனுக்கு மரணமில்லை./
ஆமாம், யாத்ரா. நன்றி.

ச.முத்துவேல் said...

@ஷீ நிசி
நன்றி, நண்பரே.

ச.முத்துவேல் said...

@அன்புமணி
அப்பாஸின் மரணம் குறித்த என் பதிவே தாமதம்தான்.அவர் 20-03-09 அன்றே இறந்துவிட்டார். நன்றி.

ச.முத்துவேல் said...

@மண்குதிரை
சுகந்தி சுப்ரமணீயம் கவிதை இன்னும் படிக்கவில்லை. முயற்சி செய்கிறேன்.
நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

அஞ்சலிகள் திரு. அப்பாஸுக்கு.

(நீங்களும் செஞ்சி பக்கமா !!!!)

ச.முத்துவேல் said...

@அமித்து அம்மா
ஆமாம், திருவண்ணாமலைக்காரன்.
நன்றி.